தமிழ்நாடு

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

4th Sep 2019 02:36 PM

ADVERTISEMENT

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? என  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக செப்டம்பர் 6-ஆம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT