தமிழ்நாடு

ஆசிரியர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து

4th Sep 2019 12:51 PM

ADVERTISEMENT

ஆசிரியர் தினத்தயொட்டி, ஆசிரியர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
அறப்பணியாம் ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் தினத்தில் அறிவு சார் சமூகத்தை உருவாக்குவதற்காக உழைக்கும்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆசிரியராக பணியைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படும் நேரத்தில், 'நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது' என்ற அவரது மொழியை எப்போதும் நினைவில் கொள்வோம். கல்விச்சூழல் எந்த அளவிற்கு மாணவர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைவிட சிறந்த சூழலை, கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். 

ஏனெனில் ஆசிரியர் பணி என்பது வெறுமனே எழுத,படிக்க சொல்லித்தருவது மட்டுமல்ல; நற்பண்பு, ஒழுக்கம், மனிதவாழ்வின் உயர்ந்த மதிப்பீடுகள், சமூக அக்கறை உட்பட சிறந்த மனிதனுக்கு தேவையான குணங்களையும் மாணவர் மனதில் விதைத்து, வளர்த்தெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் ஆசிரியப் பெருமக்களுக்கு இருக்கிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் பெற்றோருக்கு அடுத்த இடத்தில் குருவை வைத்துக் கொண்டாட சொல்லித்தந்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நல்ல நாளில் என்னுடைய ஆசிரிய பெருமக்களை நன்றியோடு நினைவு கூறுவதோடு, ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இனிய வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT