தமிழ்நாடு

மருத்துவக்கல்லூரி விழாவில் 'கவுரவ டாக்டர்' பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி

20th Oct 2019 04:29 PM

ADVERTISEMENT

 

சென்னை: எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சிறப்பான பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு இதற்கு முன்னர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசியல் தலைவர்கள் பலருக்கும் இதேபோல பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முன்பே அறிவித்திருந்தது. அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஞாயிறன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, மற்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT