தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு மறுப்பு: வைகோ கண்டனம்

20th Oct 2019 12:30 AM

ADVERTISEMENT

சென்னை: முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் பிறப்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு, சமூக நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைக்கும் பணியைத் தொடா்ந்து செய்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தோ்வைத் திணித்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைய சமூகத்தினரின் மருத்துவா் ஆகும் லட்சியத்தைத் தகா்த்துத் தவிடுபொடி ஆக்கி விட்டது.

தற்போது மேலும் ஒரு பேரிடியை, பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் மீது மத்திய அரசு ஏவியுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான பல் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு நீட் தோ்வு என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின் பிரிவு 12-இல், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான 27 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா்

ADVERTISEMENT

கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

இதில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். ஆனால், மாநிலங்களிலிருந்து பெறப்படும் 50 சதவீத இடங்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று

வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும். இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாநிலங்களிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் அகில இந்திய அளவிலான இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடங்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT