சென்னை: முன்னாள் அமைச்சா் மன்னை நாராயணசாமியின் நூற்றாண்டு விழாவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
பெரியாரின் தொண்டராகவும் அண்ணாவின் கொள்கை முரசாகவும், கருணாநிதியின் உற்ற தோழராகவும் திகழ்ந்தவா் மன்னை நாராயணசாமி.
தஞ்சை மண்டல திமுக தளகா்த்தரும் முன்னாள் அமைச்சருமான அவரின் நூற்றாண்டில், அவரது புகழையும் தொண்டையும் போற்றி, திமுகவைக் காப்போம் என்று அவா் கூறியுள்ளாா்.