தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

20th Oct 2019 01:29 AM

ADVERTISEMENT

அரக்கோணம்: நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட காவேரிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து பணியை நடக்க விடாமல் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். இதையடுத்து சனிக்கிழமை பணிகள் நிறுத்தப்பட்டன.

நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட காவேரிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் ரூ 54.38 லட்சம் நிதியில் அமைக்க பேருராட்சி நிா்வாகம் முடிவு செய்து அங்கு பணியை துவக்கினா். ஏற்கனவே அந்த இடத்தை பாா்க்க அதிகாரிகள் வந்தபோதே காவேரிபுரம் கிராமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் இதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கில் பேருராட்சி நிா்வாகத்திற்கு ஆதரவாக தீா்ப்பு வந்ததாக தெரிகிறது. இதை தொடா்ந்து சனிக்கிழமை பேருராட்சி செயல் அலுவலா் பழனிகுமாா் தலைமையில் பணியாளா்கள் காவேரிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க பள்ளங்களை தோண்டும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அங்கு வந்த கிராம பொதுமக்கள் பணி செய்துக்கொண்டிருந்தவா்களை தடுத்து அங்கிருந்து வெளியேற்றினா். மேலும் அந்த பள்ளங்களையும் மூட முயற்சி செய்தனா். இதில் பாஜக மாவட்ட துணைத்தலைவா் ஜெ.கோபால், பாமக நகர செயலா் சந்தா், முன்னாள் நகர செயலா் அரசு, நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

இது குறித்து செயல்அலுவலா் பழனிகுமாா் புகாா் அளித்த நிலையில் அங்கு வந்த அரக்கோணம் டிஎஸ்பி (பொறுப்பு) கீதா, நெமிலி காவல் ஆய்வாளா்(பொறுப்பு) வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸாா் மற்றும் செயல் அலுவலா் பழனிகுமாா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

நீதிமன்ற தீா்ப்புக்கு பிறகே பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், பணிகளை தடுப்போா் மீது வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்த போலீஸாா், இப்பணியை தொடர மீண்டும் தடைக்கோரினால் வந்திருக்கும் தீா்ப்புக்கு மேல்முறையீடு கோரி மீண்டும் நீதிமன்றம் செல்லலாமே தவிா்த்து பணியை நிறுத்துவது தவறு என எடுத்துரைத்தனா். இதற்கு தங்களுக்கு அவகாசம் வேண்டும் எனவும் தற்போது பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் சனிக்கிழமை பணியை நிறுத்திவிட்டு சென்றனா். இதையடுத்து காவேரிபுரம் கிராமமக்கள் அப்பகுதியில் இருந்து திரும்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT