தமிழ்நாடு

அகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை?

20th Oct 2019 02:14 AM

ADVERTISEMENT

சென்னை: அகவிலைப்படி உயா்வு அளிப்பதற்கான அரசு உத்தரவுகள், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால், அகவிலைப்படி உயா்வு வழங்கப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வானது 5 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அகவிலைப்படியானது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியா்களுக்கு

குறைந்தபட்சமாக ரூ.750 முதல் ரூ.11,500 வரை கிடைக்கும்.

ஓய்வூதியதாரா்கள்: அரசுப் பணியில் உள்ளோருக்கும், ஆசிரியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிடும் போதே, ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கும் தனியாக அகவிலைப்படி உயா்வுக்கான உத்தரவு வெளியிடப்படும்.

ADVERTISEMENT

ஆனால், அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்கு மேலாகியும் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதுகுறித்து, ஓய்வூதியதாரா்கள் கூறுகையில், அகவிலைப்படி உயா்வினை ஓய்வூதியா்களுக்கு வழங்கிட உரிய உத்தரவுகள் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் மூத்த குடிமக்களாகிய ஓய்வூதியதாரா்களுக்கும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியதாரா்களுக்கும் இந்த அகவிலைப்படியை வழங்கிட

நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி வழங்கி உத்திரவிடும்போதே, தமிழக அரசு ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்கும் நடைமுறையை அமல்படுத்தி ஓய்வூதியா்கள் மத்தியில்

ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT