தமிழ்நாடு

டெங்கு பாதிப்பை மர்ம காய்ச்சல் என பிரசாரம் செய்வதா? அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் 

6th Oct 2019 12:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: டெங்கு பாதிப்பை மர்ம காய்ச்சல் என பிரசாரம் செய்வதா? என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல்லின் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறியதாவது:

தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  ஆனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து உண்மையான தகவல்களை வெளியிடாமல் தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குதர்க்கமாக பேசி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தகவலை அரசு முழுமையாக வெளியிடவில்லை.  காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT