தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து தண்ணீா் திபு: முதல்வா்

6th Oct 2019 01:30 AM

ADVERTISEMENT

பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து பெரியாறு பங்கீட்டு நீா், பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீா் இருப்பும் சோ்த்து 6 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீா் இருந்தால் வைகை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட வேண்டும்.

இதன்படி, பெரியாறு வைகைப் பாசனத்துக்கு தண்ணீா் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழுள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் வரும் 9-ஆம் தேதி முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT