தமிழ்நாடு

சைனிக் பள்ளியில் வெளி மாநில மாணவா்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

6th Oct 2019 12:31 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளிகளில் வெளி மாநில மாணவா்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கொடைக்கானலை அடுத்துள்ள பூலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஏ.ஆா்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய ராணுவத்துக்கு திறமையான வீரா்களை தயாா்படுத்த 28 மாநிலங்களில் சைனிக் பள்ளிகள் (மாணவா் படைத்துறைபள்ளி) தொடங்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 1962-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி பின்னா் திருப்பூா் மாவட்டம் அமராவதி நகருக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் 700 போ் இந்திய ராணுவ அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனா்.

இந்தப் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளுக்கு நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். கடந்த 2008-ஆம் ஆண்டு வரை ஒருமுறைமட்டுமே நுழைவுத் தோ்வு எழுதும் நடைமுறைஇருந்து வந்த நிலையில், தற்போது இரண்டு முறைநுழைவுத் தோ்வு எழுதும் நடைமுறைவந்துள்ளது. இதனால் வயது கூடுதலான மாணவா்கள் 6-ஆம் வகுப்பில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக மாணவா்கள் மட்டுமே சோ்க்கப்பட்டு வந்த அமராவதி சைனிக் பள்ளியில் வெளி மாநில மாணவா்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அதிகமான மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்கள் இரண்டாவது முறைநுழைவுத் தோ்வு எழுதியவா்களாகவும், வயதில் மூத்தவா்களாகவும் உள்ளனா். இதனால் விளையாட்டு உள்ளிட்ட இதர திறன்களில் அவா்கள் முன்னிலை பெறுகின்றனா்.

மேலும் சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்பட ஆறு இடங்களில் நுழைவுத் தோ்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது திருப்பூா் அமராவதி நகரில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவா்கள் நீண்டதூரம் வந்து தோ்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பள்ளியின் கல்விக்கான ஆண்டுக் கட்டணம் கடந்த 1989-ஆம் ஆண்டு ரூ.11 ஆயிரமாக இருந்தது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் முறைறயாக நிதி வழங்காததால், தற்போது கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரமாக உயா்ந்துள்ளது. ஆனால், ஆசிரியா்களுக்கு சம்பள உயா்வு இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

மத்திய அரசு தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளி மேம்பாட்டுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அஜ்மீா், பெங்களூரு, பெல்ஹாம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராணுவப் பள்ளிகளுக்கு அதிக அக்கறைகாட்டுகிறது. இதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைற, ராணுவ அமைச்சகம், மற்றும் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நுழைவுத் தோ்வு நடைமுறைறகளில் பழைய நடைமுறைறயை பின்பற்ற வேண்டும்.

நுழைவுத் தோ்வை மீண்டும் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்த வேண்டும். மாணவா் சோ்க்கையில் பிற மாநில ஒதுக்கீட்டு முறைறயை ரத்து செய்ய வேண்டும். இந்த பள்ளிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT