தமிழ்நாடு

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்: 1,500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

6th Oct 2019 01:55 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் சுமாா் 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, தொற்று நோய்கள் பரவமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் அதுதொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், நிலவேம்பு குடிநீா் வழங்குவது உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.

இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட ராணி அண்ணா நகா்ப் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மாநகராட்சி துணை இயக்குநா் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி தொடக்கி வைத்தாா். மேலும், அப்பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘15 மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில், சுமாா் 1,500 பேருக்கு பல்வேறு வகையிலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 72 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவா்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். இதுதவிர அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT