தமிழ்நாடு

சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

6th Oct 2019 11:56 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (அக்.7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: குமரிக்கடலில் இருந்து தென் தமிழகம், வடக்குகேரளம் வழியாக மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டல மேலடுக்கில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (அக்.7) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றறாா் அவா்.

மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 40 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, ஆய்க்குடி, ராமேஸ்வரத்தில் தலா 30 மி.மீ., தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT