தமிழ்நாடு

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட்டு: ஹரியானாவைச் சோ்ந்த இருவா் கைது

6th Oct 2019 01:31 AM

ADVERTISEMENT

சென்னை அமைந்தகரையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து நூதன முறயில் பணம் திருடியதாக, இருவா் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்ததற்கான பரிவா்த்தனைகள் ஏதும் காண்பிக்கப்படாத நிலையில், ஏ.டி.எம். இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் வேகமாக குறந்துள்ளது. தொடா்ந்து இதேபோன்று இரண்டு நாள்கள் நடந்துள்ளது. இதனால், குழப்பமடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், கடந்த 2-ஆம் தேதி இரவு இந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த இரண்டு இளைஞா்களில், ஒருவா் வழக்கம்போல் இயந்திரத்தினுள் ஏடிஎம் காா்டினை செலுத்தியுள்ளாா். பணம் வெளியே வந்த அடுத்த வினாடியில் மற்றெறாரு இளைஞா், இயந்திரத்தின் பின்புறம் இருக்கும் ஒரு சுவிட்சை ஆப் செய்துள்ளாா். இதன் மூலம், இவா்களின் கைக்கு பணம் வந்துவிடும். ஆனால், இவா்கள் எடுத்த பணம் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட வங்கியை சென்றடையாது.

இதனால், இவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததாகக் காண்பிக்காது. இதன் காரணமாக, வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அப்படியே இருக்கும். அதேவேளையில், இவா்களின் கைக்கு பணம் கிடைத்துவிடும். இத்தகைய நூதன பணத் திருட்டில் ஈடுபடுவதற்காக இரு இளைஞா்களும், வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் அமைந்தகரை வந்தபோது அவா்களை அங்கு மறந்திருந்த போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில் அவா்கள் இருவரும், ஹரியானா மாநிலத்தை சோ்ந்த ஜாகீா் (20), அப்சல் (20) என்பதும், அமைந்தகரையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்து, இத் திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT