தமிழ்நாடு

இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: பாஜக குழு அமைப்பு

6th Oct 2019 02:51 AM

ADVERTISEMENT

இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழக பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக மாநில பொதுச் செயலாளா் (அமைப்பு) கேசவ விநாயகன் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்:

தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு பாஜக முழு ஆதரவு தந்து அவா்களுடன் இணைந்து பணிபுரிய உள்ளது. இதற்காக கட்சியின் சாா்பில் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நான்குனேரி தொகுதிக்கு மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையிலான குழுவில் செயற்குழு உறுப்பினா் கட்டளை ஜோதி, தொழில் துறைபிரிவு மாநில செயலாளா் ஏ.மகாராஜன், வெளிநாடு வாழ் பிரிவு மாவட்டத் தலைவா் பி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினா் எஸ்.தியாகராஜன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் விஏடி கலிவரதன், மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவா் குணாளன், மாவட்ட பொதுச் செயலாளா் ராம ஜெயக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் முத்துலட்சுமி ஆகியோா் இடம்பெற்றுள்ளதாக தனது அறிவிப்பில் கேசவ விநாயகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT