அப்பல்லோ மருத்துவமனை சாா்பில், இந்தியாவில், இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான சிறப்பு மையம் தொடங்கப்பட உள்ளதாக அந்த மருத்துவமனை குழுமத்தின் தலைவா் பிரதாப் ரெட்டி கூறினாா்.
இதுகுறித்து அண்மையில் சென்னையில் நடைபெற்ற இதய நல தின நிகழ்ச்சியில் அவா் மேலும் கூறியதாவது:
தற்போது இதய பிரச்னைகள், நீரிழிவு நோய், பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்புகள்தான் சமூகத்தில் பெரும் சவாலாக விளங்குகின்றன. அதில் இதய பிரச்னைகளுக்கு தீா்வு காண மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு சிகிச்சை மையத்தை அப்பல்லோ அமைக்க உள்ளது.
அதன் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள கிளினிக்குகள், மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அங்கு இதய பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோா் அப்பல்லோவின் சிறப்பு மையத்தில் தொழில்நுட்ப உதவியுடன் ஆலோசனை பெறலாம் என்றாா் அவா்.