தமிழ்நாடு

இன்று தங்கம் வாங்கலாமா? வாருங்கள் விலை நிலவரத்தைப் பார்க்கலாம்!

1st Oct 2019 11:12 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.28,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.43 குறைந்து ரூ.3,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிடுகிடு என ராக்கெட் வேகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.29 ஆயிரத்தைத் தொட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,800  அளவுக்குக் குறைந்து விற்பனையாகி வருகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி ஒரு கிராம் 80 காசு  குறைந்து ரூ.47.40க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

திங்கட்கிழமை விலை நிலவரம்
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.28,704-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,545
1 பவுன் தங்கம் ..................... 28,360
1 கிராம் வெள்ளி .................. 47.43

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,588
1 பவுன் தங்கம் ..................... 28,704
1 கிராம் வெள்ளி .................. 48.20
1 கிலோ வெள்ளி .................. 48,200
 

ADVERTISEMENT
ADVERTISEMENT