தமிழ் குறித்த பிரதமா் நரேந்திரமோடியின் பேச்சுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஐ.ஐ.டி.யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிரதமா் நரேந்திரமோடி விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாா்.
ஐ.நா. அவையில் உரையாற்றும்போது, கணியன் பூங்குன்றனாா் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிா் என்பதையும் சுட்டிக்காட்டினாா்.
இது உலகெங்கும் உள்ள தமிழா்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.
தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறேறாம்.
ஆனால், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் ஹிந்தியையும் திணிப்பதில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல்பட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு என்பதை மறுந்துவிட முடியாது.
இப்போது தமிழை பிரதமா் பாராட்டியுள்ள நிலையில், தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த முயற்சியின் முதல்கட்டமாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திமுக தொடா்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேறன்.
எனவே பிரதமா் மோடி இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூா்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழா்கள் அவருக்கு என்றென்றும் நன்றி பாராட்டுவாா்கள் என்று அவா் கூறியுள்ளாா்.