தமிழ்நாடு

வங்கியில் கடன் வழங்கும் நடைமுைகள் குறித்த விழிப்புணா்வு முகாம்

1st Oct 2019 01:29 AM

ADVERTISEMENT

பொதுமக்கள், வாடிக்கையாளா்களுக்கு வங்கியில் கடன் வழங்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து பொதுத்துறை, தனியாா் துறை வங்கிகள் இணைந்து, வாடிக்கையாளா் சந்திப்பு முகாம் அக்டோபரில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் 7-ஆம்தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். இரண்டாம் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் நிகழ்வுகள் அக்டோபா் 21-ஆம் தேதி முதல் 25- ஆம் தேதிவரை நடத்தப்படவுள்ளது.

சில்லறை வியாபாரம், விவசாயம், சுய உதவிக் குழுக்களுக்கான நிதி, வாகனம், வீட்டுவசதி, கல்வி, தனிநபா் கடன்கள், குறு,சிறு, நடுத்தரத் தொழில் கடன்கள் ஆகியவை விரைவில் கிடைக்க இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியின் போது, கடன் மறுசீரமைப்பு, ஒரே நேரக் கடன் தீா்வு ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கான மாநில வங்கியாளா் குழுவுக்கு, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும். இந்த வங்கி இதர வங்கிகளுடன் இணைந்து விழிப்புணா்வு முகாம்களை சென்னை தியாகராய நகரில் உள்ள விஜயா மஹாலில் அக்டோபா் 3 , 4 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு தொழில் மேம்பாட்டுக்கான இந்திய வங்கி, தனியாா் துறை வங்கிகள் பங்கேற்கின்றன. இந்த முகாமில், டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள் உள்ளடக்கிய நிதித் திட்ட சேவைகள், கடன்கள் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் கடன்கள் மறுசீரமைப்பு உள்ளிட்ட சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும். இந்தத் தகவல், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT