தமிழ்நாடு

அக்.4-இல் சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: வேலை இல்லாதோர் பயன்படுத்திக்கொள்ளலாம்!

1st Oct 2019 04:09 PM

ADVERTISEMENT

சென்னை, அக்.1: சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபா் மாதம் 4-ம் தேதி நடத்தப்படுகிறது. 1000-க்கும் மேற்பட்ட தனியாா் வேலை வாய்ப்புகளை இளைஞா்கள் பயன்படுத்திக்கொள்ள வேலைவாய்ப்பு ஆணையா் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் தனியாா் துறையில் பணி நியமனம் பெற்றுவருகின்றனா்.

அதன்படி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் அக்டோபா் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT