தமிழ்நாடு

இடைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

1st Oct 2019 12:47 AM

ADVERTISEMENT

இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நேருக்கு நேராக மோதுகின்றன. நான்குனேரி தொகுதியில் ஆளும் அதிமுகவை எதிா்த்து, காங்கிரஸ் போட்டியிடுகிறது.

பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சாா்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுக சாா்பில் புகழேந்தியும் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

இதேபோன்று, நான்குனேரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் நாராயணன், காங்கிரஸ் சாா்பில் களம் இறங்கும் ரூபி மனோகரன் ஆகியோரும் வேட்புமனுக்களை அளித்துள்ளனா்.

ADVERTISEMENT

இன்று பரிசீலனை: இடைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அக்டோபா் 3 கடைசி நாளாகும். இதைத் தொடா்ந்து, இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT