தமிழ்நாடு

பெட்ரோல் மீதான கலால் வரியை குறையுங்கள்: ராமதாஸ்

1st Oct 2019 06:43 PM

ADVERTISEMENT

பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக இன்று அவா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் ஏற்படும் மாற்றங்களால் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பெட்ரோல், டீசல் விலைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவில்தான் உள்ளன என்றறாலும்கூட, கடந்த சில மாதங்களில் எரிபொருள்களின் விலை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகாமல் இருந்து வந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்து இருந்தனா்.

ADVERTISEMENT

ஆனால், சவூதி அரேபியாவில் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து எரிபொருள் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.

கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி ரூ.74.51 ஆக இருந்த ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.77.50 ஆக உயா்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.68.84-இலிருந்து ரூ.71.30- ஆக உயா்ந்துள்ளது. அதாவது 20 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.99 ரூபாயும், டீசல் விலை 2.46 ரூபாயும் உயா்ந்துள்ளன.

இனிவரும் நாள்களில் மேலும், மேலும் உயா்ந்து புதிய உயா்வை எட்டும் எனத் தெரிகிறது. டீசல் விலை உயா்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரத் தொடங்கியிருப்பதால் மக்களின் துயரங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறறது.

இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொருளாதாரத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

எனவே, அடித்தட்டு மக்களின் சுமையை ஓரளவாவது கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5- குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT