தமிழ்நாடு

திருச்சி என்ஐடி  பேராசிரியருக்கு தேசிய விருது

1st Oct 2019 03:25 AM

ADVERTISEMENT


 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக முன்னாள் பேராசிரியருக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) மின்னணு துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எஸ்.ராகவன். அவரது சாதனைகளைக் கருத்தில்கொண்டு, தில்லியில் உள்ள மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல் கழகத்தால் (ஐஇடிஇ) தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தில்லி, அயோத்தியாவில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆவத் பல்கலைக்கழகத்தில் செப். 28, 29 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற நிகழ்வில், 2019-ஆவது ஆண்டுக்கான ரஞ்சனா பால் நினைவு விருது மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை  இஸ்ரோ விஞ்ஞானி ஓய்.எஸ். ராஜன் வழங்கினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT