தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அக்.16 இல் கண்டன ஆா்ப்பாட்டம்

1st Oct 2019 12:14 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபா் 16-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன், சிபிஐ (எம்.எல்) மாநில செயலாளா் என்.கே.நடராஜன் ஆகியோா் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கை காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியுள்லது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளா்கள் வேலையிழப்பு, வேலையின்மை அதிகரித்து வருகிறது. விவசாயிகள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனா்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் மக்களின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறது.எனவே, மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்டோபா் 13 முதல் 14 வரை பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும், அக்டோபா் 16-ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT