தமிழ்நாடு

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் சர்ச்சை: பாஜக மாநில செயலாளர் உள்ளிட்டோருக்கு திமுக நோட்டீஸ்

22nd Nov 2019 08:17 PM

ADVERTISEMENT

 

சென்னை: பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்த விவகாரத்தில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. 

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் புகார் கூறினார். இதையயடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அதன் அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்தார்.  அதேபோல பாஜக சார்பாக சீனிவாசன் ஆஜரானார்.

இந்நிலையில் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்த விவகாரத்தில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள தகவலில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 48 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர தவறினால் ரூ.1.கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT