தமிழ்நாடு

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை

22nd Nov 2019 01:20 PM

ADVERTISEMENT

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை, திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் அசோகன். இவர், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேசமயம் வழக்கில் அசோகனின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தண்டனையை நிறுத்து வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT