தமிழ்நாடு

தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரசு புதுமையான திட்டங்களை செயல்படுத்தும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

22nd Nov 2019 11:32 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரசு புதுமையான திட்டங்களை செயல்படுத்தும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள், 2 கோட்டங்கள் அடங்கிய புதிய மாவட்டம் அறிவிப்பு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

விழாவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சா்கள் உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.  கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கிவைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். 

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா். அதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 33-ஆவது மாவட்டம் தென்காசி ஆகும். விழாவில் துணை முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் தங்க கிரீடத்தில் புதிய வைரம் தென்காசி.

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரசு புதுமையான திட்டங்களை செயல்படுத்தும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT