தமிழ்நாடு

சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு

17th Nov 2019 10:01 AM

ADVERTISEMENT

 

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், அம்பத்தூா் புதூா் நகரைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகளான கேத்தரின்(4), காய்ச்சல் காரணமாக போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். 
அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதனுடன், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளும் இருந்ததாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் அச்சிறுமி இருந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கேத்தரின் சனிக்கிழமை உயிரிழந்தாா். 

ADVERTISEMENT

கடந்த இரு மாதங்களில் மட்டும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளால் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT