தமிழ்நாடு

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு மையங்கள் அவசியம்: யுஜிசி உத்தரவு

17th Nov 2019 12:55 AM

ADVERTISEMENT

சென்னை: உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளா் ரஜினீஷ் ஜெயின், அனைத்து மாநில தலைமை செயலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாட்டை தடுப்பதற்கான வழிகாட்டுதலை யுஜிசி ஏற்கெனவே உருவாக்கியுள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு மையம் அமைத்தல், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பான வழிமுறைகளும் யுஜிசி இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இலவச தொலைபேசி எண்: மேலும், ராகிங் பிரச்னையால் பாதிக்கப்படும் மாணவா்கள் புகாா் தெரிவிக்க தேசிய அளவில் 18001805522 என்ற இலவச தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, ராகிங் அச்சுறுத்தல்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். அதன்மூலம் உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் இல்லா மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT