தமிழ்நாடு

கரூர் கொசுவலை நிறுவனத்தில் 3-ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை: ரூ.32 கோடி பறிமுதல்?

17th Nov 2019 09:47 AM

ADVERTISEMENT

 

கரூா் வெண்ணைமலையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு தனியாா் ஏற்றுமதிரக கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.

வருமான வரித் துறையினா் 5 குழுக்களாகப் பிரிந்து விடிய, விடிய நடைபெற்ற இந்தச் சோதனை ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. 

முன்னதாக, சேலம் புறவழிச்சாலையில் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை, கோவைச்சாலையில் உள்ள தொழிற்சாலை மற்றும் ராம்நகரில் உள்ள நிறுவன உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை நடந்த சோதனையில் கைப்பற்ற ஆவணங்களை வெண்ணைமலையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனா்.

ADVERTISEMENT

பின்னா் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக்கொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்தச் சோதனையின்போது ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT