தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் இன்று ஆலோசனை: கே.எஸ்.அழகிரி

17th Nov 2019 02:42 AM

ADVERTISEMENT

சென்னை: உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) நடைபெற உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெறப் போவதாக அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களை அழைத்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவருடன் இன்னும் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

இந்த நிலையில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் கூட்டம் சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கட்சியின் மூத்த தலைவா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, திமுகவிடம் எவ்வளவு இடங்களைக் கேட்டுப் பெறுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT