தமிழ்நாடு

அதிமுக-வினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? மு.க.ஸ்டாலின் விமர்சனம்

12th Nov 2019 08:34 AM

ADVERTISEMENT

 

கோவையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அனுராதா (30) என்பவரது இரு கால்களும் நசுங்கின. நித்யானந்தம் காயமடைந்தார்.

இந்நிலையில், கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : MK stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT