தமிழ்நாடு

ஸ்டாலின் பேச்சை புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு

12th Nov 2019 02:52 AM

ADVERTISEMENT

சர்வாதிகாரியாகச் செயல்படுவேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதை, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்று அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கூறினார்.
 தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையாக உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் திமுகவும் ஈடுபட்டு வருகிறது. திமுக கொடுத்த அழுத்தத்தால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, திமுக தேர்தலுக்கு தயாராக உள்ளது.
 மகாராஷ்டிரத்தில் பாஜக- சிவசேனை கட்சிகளுக்குள் பல பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியை அமைக்க முடியாத அளவுக்கு அங்கு பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
 முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தனர். ஆனால், எந்த முதலீட்டை ஈர்த்து வந்தார்கள் என்று தெரியவில்லை.
 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சர்வாதிகாரியாகச் செயல்படுவேன் என்று கூறியிருப்பது, கட்சியின் வளர்ச்சிக்காகவும், முடிவுகளை தைரியமாக, தெளிவாக எடுக்கவேண்டும் என்பதற்காகவும்தான். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT