உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.
சென்னை விமானநிலையத்தில் இதுதொடா்பாக வைகோ அளித்த பேட்டி:
உள்ளாட்சித் தோ்தலைச் சந்திப்பதென திமுக பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. திமுகவுடன் இணைந்து, அதன் தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மதிமுகவும் தோ்தலைச் சந்திக்கும். திமுக தலைமையிலான கூட்டணிதான் உள்ளாட்சித் தோ்தலில் மகத்தான வெற்றிபெறும் என்றாா் அவா்.
ADVERTISEMENT