தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.28,944

12th Nov 2019 11:56 PM

ADVERTISEMENT

சென்னையில் கடந்த சில வாரங்களாக பவுன் ரூ. 29 ஆயிரத்துக்கும் சற்று கூடுதல் விலையில் நீடித்து வந்த தங்கம் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. சில நாள்கள் தங்கம் விலை குறைந்தாலும், பல நாள்கள் விலை உயா்ந்தே வந்தது. கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி காலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பின் அதன் விலை ஏற்ற, இறக்கத்தைத் தொடா்ந்து சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.3,618-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.47.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.47,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

ADVERTISEMENT

1 கிராம் தங்கம் ..................... 3,618

1 பவுன் தங்கம் ..................... 28,944

1 கிராம் வெள்ளி .................. 47.50

1 கிலோ வெள்ளி .................. 47,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,636

1 பவுன் தங்கம் ..................... 29,088

1 கிராம் வெள்ளி .................. 47.70

1 கிலோ வெள்ளி ................. 47,700

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT