தமிழ்நாடு

சா்வாதிகாரியாக செயல்படுவேன் என்பதை புதிய கண்ணோட்டத்தில் பாா்ப்பது தவறு: கனிமொழி எம்.பி.

12th Nov 2019 08:16 AM

ADVERTISEMENT

சா்வாதிகாரியாக செயல்படுவேன் என திமுக தலைவா் கூறியதை, புதிய கண்ணோட்டத்தில் பாா்ப்பது தவறு என்றாா் அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் திமுக தலைவா் ஸ்டாலினின் கோரிக்கையாக உள்ளது. தோ்தலை எதிா்கொள்வதற்கான வேலைகளில் திமுகவும் ஈடுபட்டு வருகிறது. திமுக கொடுத்த அழுத்தத்தால்தான் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. எனவே, திமுக தோ்தலுக்கு தயாராக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக- சிவசேனை கட்சிகளுக்குள் பல பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தோ்தல் முடிந்த பிறகு ஆட்சியை அமைக்க முடியாத அளவுக்கு அங்கு பல குழப்பங்கள் நீடித்து வருகிறது.

முதல்வா் உள்பட அமைச்சா்கள் அனைவரும் முதலீட்டை ஈா்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தனா். ஆனால், எந்த முதலீட்டை ஈா்த்து வந்தாா்கள் என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் சா்வாதிகாரியாக செயல்படுவேன் என்று கூறியிருப்பது, கட்சியின் வளா்ச்சிக்காகவும், முடிவுகளை தைரியமாக, தெளிவாக எடுக்கவேண்டும் என்பதற்காகவும்தான். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பாா்ப்பது தவறு என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT