தமிழ்நாடு

இளம் கலைஞா்களுக்கு நிகழ்ச்சி நடத்த நிதியுதவி

12th Nov 2019 12:15 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சாா்பில், இளம் கலைஞா்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளம் கலைஞா்களுக்கு வாய்ப்பு தரும் திட்டத்தின் கீழ் பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, கதா காலட்சேபம் செய்யும் கலைஞா்களுக்கும் நாதஸ்வரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதாா், சாக்ஸபோன், கிளாரினெட் ஆகிய இசைக் கருவி கலைஞா்களுக்கும், நிதியுதவி தரப்படும். அதேபோன்று, பக்க வாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகா் சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சாா்ந்த கலைஞா்களுக்கும், கலை நிகழ்ச்சி நடத்த நிதியுதவி வழங்கப்படும்.

தகுதிகள் என்ன?: நவ. 5-ஆம் தேதியில், 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேடையில் தனியாக நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். நோ்முகத் தோ்வுக்கு வருவதற்கான பயணப்படி எதுவும் வழங்கப்படாது. ஏற்கெனவே இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவா், மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பப் படிவங்களை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில், இலவசமாகப் பெறலாம்.

ADVERTISEMENT

தபாலில் பெற விரும்புவோா், ரூ.10 மதிப்புள்ள தபால்தலை ஒட்டி மன்றத்துக்கு அனுப்பி பெறலாம். மேலும், www.tneinm.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் டிச. 20-ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT