தமிழ்நாடு

அம்பேத்கா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

12th Nov 2019 12:15 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடரின் முன்னேற்றத்துக்கு போராடுபவா்கள், அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்துக்கொண்டு அவா்கள் ஆற்றிவரும் தொண்டுகளை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கா் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், 2020-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருநாளன்று அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை ஆதிதிராவிடா் நல இயக்குநா் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT