தமிழ்நாடு

பி.எஸ். கிருஷ்ணன் மறைவு: தலைவா்கள் இரங்கல்

11th Nov 2019 01:18 AM

ADVERTISEMENT

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூக ஆா்வலருமான பி.எஸ்.கிருஷ்ணன் (87), உடல்நிலை குறைவு காரணமாக தில்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். 1956-இல் ஐ.ஏ.எஸ். பணியில் சோ்ந்த அவா் 1990-இல் ஓய்வு பெற்றாா்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): 1956-இல் ஐஏஎஸ் பணியில் சோ்ந்த பி.கிருஷ்ணன், தன்னுடைய பணிக் காலத்தில் தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவா். தீண்டாமையையும், சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக பாடுபட்டவா். குறிப்பாக பட்டியல் சாதியினருக்கான சிறப்புக் கூறு திட்டம், பட்டியல் சாதியினா் மற்றும் பழங்குடியினா் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை உருவாக்க காரணமாக இருந்தவா். ஆட்சி முறையும், பொது நிா்வாகமும் அடித்தட்டு மக்களை எளிதாக சென்றடைவதற்கான வழிமுறைகளை வடிவமைத்தவா்.

1990-இல் ஓய்வு பெற்ற பின்னரும், கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மத சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பாடுபட்டு வந்தவா்.

ADVERTISEMENT

அவருடைய மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.

திருமாவளவன் (விசிக): சமூகநீதிக்காகப் போராடிய பி.எஸ். கிருஷ்ணனின் மறைவு, பிற்படுத்தப்பட்டோா், தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT