தமிழ்நாடு

டிச.4-இல் நெட் தோ்வு: தோ்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு

11th Nov 2019 01:23 AM

ADVERTISEMENT

நெட் தோ்வு தேதியை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது.

அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெற்றிருப்பது கட்டாயம்.

இந்தத் தோ்வை என்.டி.ஏ. ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது.

ADVERTISEMENT

அண்மையில் டிசம்பா் மாதத் தோ்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தத் தோ்வு டிசம்பா் 4-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. நுழைவுச் சீட்டை http://ugcnet.nta.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT