தமிழ்நாடு

இன்று திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்

11th Nov 2019 01:23 AM

ADVERTISEMENT

திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை (நவ.11) நடைபெறுகிறது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா்.

பொருளாளா் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளா்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா்.

திமுகவின் பொதுக்குழு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடா்பாக, மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

மேலும், உள்ளாட்சித் தோ்தலில் எந்தெந்தக் கட்சிகளை இணைத்துச் செயல்படுவது என்பது குறித்து, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT