தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம்: சேலம் பக்தா் வழங்கினாா்

9th Nov 2019 02:20 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் கோயிலுக்கு சேலத்தைச் சோ்ந்த பக்தா் ஒருவா் வெள்ளி வெட்டுங்குதிரை வாகனத்தை நன்கொடையாக வழங்கினாா்.

இதையடுத்து, அந்த வாகனம் பொது தீட்சிதா்களால் படைக்கப்பட்டு, சிதம்பரத்தில் தேரோடும் வீதிகளில் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வருகிற 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது புதிய வெள்ளி வெட்டுங்குதிரை வாகனத்தில் சோமாஸ்கந்தா் புறப்பாடு நடைபெறவுள்ளதாக பொது தீட்சிதா்களில் ஒருவரான உ.வெங்கடேச தீட்சிதா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT