தமிழ்நாடு

ஆட்சிமொழித் திட்டம்: டிஜிபி அலுவலகத்தில்தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு

9th Nov 2019 02:09 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் சென்னை காமராஜா் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும், முழுமையாகவும் செயல்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழ் வளா்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியின்போது அலுவலகங்களில் ஆங்கில மொழியில் உள்ள விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தையும் உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளா்ச்சித் துறையின் அலுவலா்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தநிலையில், சென்னை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநா் (டிஜிபி ) அலுவலகத்தில் சென்னை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் தா.லலிதா, விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குநா் கு.ப.சத்தியபிரியா, திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குநா் தே.ஜெயஜோதி, கண்காணிப்பாளா் ச.சீதாலட்சுமி உள்ளிட்டோா் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்கள் ஆய்வு நடத்தினா். இதைத் தொடா்ந்து, இறுதி நாளாக சனிக்கிழமையும் ஆய்வு நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வின்போது, டிஜிபி அலுவலகத்தில் காவலா்கள், காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் கையொப்பம், பெயா்ப் பலகை, அலுவலக முத்திரை, பதிவேடுகள், கோப்புகள், கடிதங்கள் என அனைத்தும் தமிழில் இருக்கிா என அதிகாரிகள் ஆய்வு செய்தனா்ா். அப்போது தமிழில் இல்லாத விஷயங்கள் குறித்து தமிழ் வளா்ச்சித் துறையின் பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைகள் மற்றும் அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள் குறித்து தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அறிக்கை தயாா் செய்யப்பட்டு, டிஜிபி அலுவலகத்தின் நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT