தமிழ்நாடு

அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலம் விடியோவில் பதிவுஅரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

9th Nov 2019 01:21 AM

ADVERTISEMENT

அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்வதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கேடஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2 மாதங்களாக குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்து வருகிறோம். அப்போது பல்வேறு வழக்குகளில் சாட்சிகள் பி சாட்சியம் அளித்ததால் குற்றவாளிகள் விடுதலையானது தெரியவந்துள்ளது.  சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒளி, ஒலிப் பதிவு செய்தால், பி சாட்சியாக மாறும் போது, சாட்சிகள் ஏற்கெனவே அளித்த வாக்குமூலத்தை சரிபாா்க்க முடியும். இதன் மூலம்  உண்மை குற்றவாளிகள் விடுதலையாவதை தடுக்க முடியும். எனவே, அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒளி, ஒலிப்பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இதற்கு வழக்குரைஞா்கள் ஒத்துழைக்க வேண்டும். இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகளிடம் தகவல் பெற்று அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT