தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்

4th Nov 2019 03:00 PM

ADVERTISEMENT


சென்னை: அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது, இன்று காலை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில்  உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் அடுத்த 2 அல்லது 3  நாட்களில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக  லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சூலூர் மற்றும் விருதுநகரின் ராஜபாளையம் பகுதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

மீனவர்களைப் பொறுத்தவரை.. 
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 4, 5ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும், 6, 7, 8ம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT