தமிழ்நாடு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை விவரத்தை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

4th Nov 2019 11:54 AM

ADVERTISEMENT


சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை விவரத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணை அறிக்கைகளில் இருக்கும் விவரங்களை வெளியிடக் கோரி தொடரப்பட்ட மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர் மாதம் தாக்கல் செய்யவும் சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - இருவா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

ADVERTISEMENT

விசாரணையின் போது, சிபிஐ தரப்பில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், விசாரணை முடியும் வரை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலிலேயே இருக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதே சமயம், விசாரணை முடியும் வரை, விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என்று சிபிஐ தரப்பும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், விசாரணையை நீதிமன்றம் கண்காணிப்பதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் கூறியுள்ளது.

சிபிஐ விசாரணை விவரத்தை வெளியிட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, ரகசிய விசாரணை விவரங்களை பொது வெளியில் வெளியிட முடியாது என்றும் கூறிவிட்டது. அடுத்த விசாரணை அறிக்கையை டிசம்பர் 3ம் தேதி சிபிஐ தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கைத் தற்போது சிபிஐ விசாரித்து, இவா்கள் மீதான முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இவா்கள் 5 பேரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு அண்மையில் மாற்றப்பட்டனா். இதற்கிடையே சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவா்களது நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 5 பேரும் காணொலிக் காட்சி மூலம் சேலம் சிறையில் இருந்து கோவை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.எஸ்.ரவி, 5 பேரின் நீதிமன்றக் காவலையும் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT