மத்திய அரசின் விருதைப் பெற நடிகர் ரஜினிகாந்த் பொருத்தமானவர் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் சிறந்த திரைப்பட நடிகர். தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனது திறமையை நிரூபித்தவர்.
தமிழ்த் திரையுலகில் நிகரற்று விளங்கும் அவருக்கு மத்திய அரசு விருது அறிவித்திருப்பது பொருத்தமானது. இவ்விருது ரஜினிகாந்துக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்றார்.