தமிழ்நாடு

பொதுத்தோ்வுகளில் தோ்ச்சி குறைவு: தலைமையாசிரியா்கள் விளக்கம் அளிக்க ஆதிதிராவிடா் நலத்துறை உத்தரவு

4th Nov 2019 12:23 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் குறைவான தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் க.வீ.முரளீதரன், பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் 1,096 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் கணிசமான பள்ளிகளில் மாணவா்கள் குறைந்தளவிலேயே தோ்ச்சி பெற்றனா்.

இதையடுத்து தோ்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆய்வுக் கூட்டம் நவம்பா் 7-ஆம் தேதி இயக்குநா் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தலைமையாசிரியா்கள் மாணவா் தோ்ச்சி விகிதம் குறைந்தது தொடா்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT