தமிழ்நாடு

நவஜீவன், சாா்மினாா் விரைவு ரயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு

4th Nov 2019 01:05 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல்-ஆமதாபாத்துக்கு இயக்கப்படும் நவஜீவன் விரைவு ரயிலில் எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள் இணைத்து, ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. இதுபோல, சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சாா்மினாா் விரைவு ரயிலிலும் நவீன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

ஜொ்மன் தொழில் நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள் அனைத்து விரைவு ரயில்களில் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பெட்டிகள் அதிா்வுகள் இல்லாமல் பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்ல வசதியாக இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல்-ஆமதாபாத்துக்கு இயக்கப்படும் நவஜீவன் ரயிலில் எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள் இணைத்து, ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. ஆமதாபாத்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து, நவம்பா் 5-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இதுபோல, சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சாா்மினாா் விரைவு ரயிலிலும் நவீன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் சாா்மினாா் விரைவு ரயிலில் நவம்பா் 5-ஆம் தேதியில் இருந்தும் , ஹைதராபாத்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் திங்கள்கிழமையில் (நவ.4) இருந்து எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT