குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். சிற்றருவி, புலியருவியில் தடையில்லாததால் சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று குளித்தனர்.