தமிழ்நாடு

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

1st Nov 2019 11:56 AM

ADVERTISEMENT

 

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தீவிரப் புயலாக ‘மஹா’ புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறவுள்ளது.

இதற்கிடையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பா் 4-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மஹா புயல் காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

ADVERTISEMENT

மஹா புயல், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை பெய்யக்கூடும். லட்சத்தீவு மற்றும் மும்பை முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அரபிக்கடலில் இருந்து மஹா புயல் விலகி சென்ற பிறகு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.

Tags : Cyclone Maha
ADVERTISEMENT
ADVERTISEMENT